புரட்டாசி மாசம் எதை எல்லாம் செய்யலாம்? செய்யக்கூடாது? தெரியுமா!...
ஜோதிடத்தின் படி சூரியன் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யக்கூடிய மாதம் புரட்டாசி மாதமாகும். புரட்டாசி தொடங்கியதும், இந்த மாதத்தில் வீட்டில் உள்ளவர்கள் யாரும் அசைவம் சாப்பிடக் கூடாது என பெரியவர்கள் சொல்வது வழக்கம். அதுமட்டுமின்றி சிலருக்கு இம்மாதத்தில் தான் பல சந்தேகங்கள் காணப்படும். குறிப்பாக திருமணம் செய்யலாமா? தொழில், வியாபாரம் தொடங்கலாமா? என்று பல கேள்விகள் உண்டு.தற்போது அவை குறித்து விளக்கமாக இங்கே தெரிந்து கொள்வோம். திருமணத்திற்கு உகந்த மாதமா? advertisement ஆடி, புரட்டாசி,மார்கழி ஆகிய மாதங்களில் திருமணம் போன்ற சுப காரியங்களைச் செய்யக்கூடாது.அதே சமயம் புரட்டாசி மாதத்தில் அறுபதாம், எழுபதாம் கல்யாணம் செய்ய எந்த ஒரு தடையும் இல்லை. கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தலாமா? கர்ப்பிணி பெண்களுக்கு இந்த மாதம் ஒற்றைப்படை மாதமாக அமையும் பட்சத்தில் வளைகாப்பு நடத்த எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. கிரகப்பிரவேசம் செய்யலாமா? பொதுவாக வீடு கிருகப்பிரவேசம், வாஸ்து பூஜை செய்யப்படுவதில்லை. வாடகை வீடாக இருந்தாலும் வீடு குடிபோகக் கூடாது. வீடு கட்ட தொடங்கி பணி நடந்து கொண்டிருந்தால், இந்த மாதத்தில் பணிக