பிரித்தானியாவின் எரிபொருள் தட்டுப்பாடு வழமைக்கு திரும்புவதாக பிரதமர் தெரிவிப்பு
பிரித்தானியாவில் எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாட ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த நிலைமை மாறததொடங்கியுள்ளதாக பிரதமர் பரிஸ் ஜோன்சன் (Boris Johnson) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மக்கள் அனைவரும் தங்களின் வாகனங்களுக்கு தேவையான எரிபொருளை சாதரண முறையிலேயே பெற்றுக்கொள்ளுமாறு அவர் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருள் தொழிற்துறையிலிருந்து வரும் அறிகுறிகள் சாதாரண நிலைக்குத் திரும்புவதன் மூலம் நிலைமை மேம்படத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"முன்கூட்டியே நிலைமை சீராகி வருவதாகவும், மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள பிரதமர சாதாரண வழியில் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ளுங்கள்," எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை “நாட்டில் ஏற்பட்டிருந்த எரிபொருள் நெருக்கடி தற்போது குறையத்தொடங்கியுள்ளதாக“ பெட்ரோல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கமும் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பிரித்தானியாவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்ததுடன், சில எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியேற்பட்டது.
கொரோனா தொற்றுநோய் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற்றம் போன்ற பல காரணிகளால் பிரித்தானியாவில் லாரி ஓட்டுனர்கள் (HGV Drivers) பணியில் கடும் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தற்போது எரிபொருள் மற்றும் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை பூர்த்தி செய்ய வேண்டுமானால் சுமார் 100,000 ஓட்டுனர்கள் தேவை என அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து நிலைமையை சரிசெய்வதற்கும், தொழிலாளர் பற்றாக்குறையை தீர்க்கவும் தற்காலிக விசா திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
மேலும் தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையினை தற்காலிகமாக சீர்செய்வதற்கு 150 இராணுவ எரிபொருள் விநியோக ஓட்டுனர்களை பயன்படுத்த தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையிலேயே, பிரித்தானியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மேம்படத் தொடங்கியுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.
LPL அணிக்கு உரிமையாளராகிய பிரித்தானிய வாழ் இலங்கை தமிழர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை!
விவாகரத்து இருக்கட்டும்.. இப்போ செம ஜாலி மூடில் சமந்தா
3 கோடி தரேன் என்னை திருமணம் செய்து கொள்... மாடல் அழகியிடம் கேட்ட ஷேக்
Comments
Post a Comment